உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எம்.பி.,யை காணவில்லை போஸ்டரால் பரபரப்பு

எம்.பி.,யை காணவில்லை போஸ்டரால் பரபரப்பு

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் எம்.பி.,யை காணவில்லை என, செங்கல்பட்டில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் எம்.பி.,யாக தி.மு.க., வைச் சேர்ந்த செல்வம் உள்ளார். இவர், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இந்நிலையில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி முழுதும், கண்டா வரச்சொல்லுங்க, எங்க தொகுதி எம்.பி.,யை எங்கேயும் காணவில்லை - காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.இதனால், தொகுதி முழுதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் யார் என்பது குறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ