மேலும் செய்திகள்
பைரவர் கோயில்களில் அஷ்டமி வழிபாடு
04-Jun-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், கால பைரவருக்கு என, தனி சன்னிதி உள்ளது. வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு உத்சவர் கால பைரவருக்கு முக்கனி அபிஷேகம் நடந்தது.இதில், மாம்பசு, அல்போன்சா, செந்துாரா, பங்கனப்பள்ளி, நீலம் உள்ளிட்ட மாம்பழ வகை, வேர் பலா, மலை வாழை, செவ்வாழை, நேந்திரம், ரஸ்தாளி, பூவன், ஏலக்கி உள்ளிட்ட வாழை பழம் என, முக்கனிகள் வாயிலாக அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து மஹா தீபாராதனையும் மலர் அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கால பைரவரை பரவசத்துடன் வழிபட்டனர்.
04-Jun-2025