உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆரநேரியில் வாலிபர் மர்ம மரணம்

ஆரநேரியில் வாலிபர் மர்ம மரணம்

ஸ்ரீபெரும்புதுார்:-ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஆரநேரியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆரநேரி சாலையாரம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக, நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=36k1cvrc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு சென்ற போலீசார், வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர், மாம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 26, என்பதும். அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கான்ராக்ட் சூப்ரவைசராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மாம்பாக்கம் -- ஆரநேரி சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மது போதையில் இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி