மேலும் செய்திகள்
புதிய அங்கன்வாடி கட்ட பூமி பூஜை
05-Feb-2025
நல்லுார்:வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் ஊராட்சி, நல்லுார் பிரதான சாலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது.ஏனாத்துாரில் இருந்து நல்லுார், தர்மநாயக்கன்பட்டரை, வையாவூர், களியனுார், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள் துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் அமைந்துள்ள சாலை வழியாக சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையோரம் அமைந்துள்ள இப்பள்ளி முன், விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால், இச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால், பள்ளி மாணவ--- மாணவியர், அங்கன்வாடி மைய குழந்தைகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, நல்லுார் பிரதான சாலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் இயங்கும் கட்டடம் முன், விபத்தை தவிர்க்கும் வகையில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
05-Feb-2025