நவராத்திரி உத்சவம் கோவில்களில் இன்று துவக்கம்
மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில், ஸ்வர்ண காமாட்சி கோவிலில், நடப்பாண்டு நவராத்திரி உத்சவம் இன்று வெகு விமரிசையாக துவங்குகிறது. தினசரி ஸ்வர்ண காமாட்சி வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அக்டோபர் 2ம் தேதி அன்று நவராத்திரி விழா நிறைவு பெற உள்ளது. அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், திருமால்பூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, இன்று, நவராத்திரி உத்சவம் துவங்கி அக்., 1ம் தேதி நிறைவு பெற உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.