உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நத்தப்பேட்டையில் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை: சுகாதார அதிகாரி

நத்தப்பேட்டையில் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை: சுகாதார அதிகாரி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தெருக்களில், ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன. இவை, அப்பகுதியில் வசிப்போரையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி கடிப்பதால், நகரவாசிகள் கடும் தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.நாய்களிடம் இருந்து ரேபிஸ் நோய் தொற்றிக் கொள்ளுமோ என்ற அச்சத்துடன் நகரவாசிகள் இருப்பதாக, மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.காஞ்சிபுரம் நகரில் மட்டும் மாதந்தோறும் நுாற்றுக்கணக்கானோர் நாய் கடியால் பாதிக்கின்றனர். நாய்கள் பெருக்கத்தை குறைக்க, அவைகளுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தொடர்கிறது.ஆனால், நத்தப்பேட்டையில் உள்ள நாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இருந்ததால், நாய்களை பிடித்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் மெத்தனமாக இருந்தன.இந்நிலையில், நத்தப்பேட்டையில் உள்ள நாய்கள் கருத்தடை சிகிச்சை மையம் சீரமைப்பு பணிகள் வேகமாக நடக்கின்றன. இம்மாதம் சீரமைப்பு பணிகள் முடிந்த உடன், நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை தொடங்கும் என, மாநகராட்சி சுகாதார பிரிவு தெரிவிக்கிறது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது :கருத்தடை சிகிச்சை மையம் இம்மாதம் இறுதியில் செயல்பட துவங்கவிடும். நாய்களை பிடித்து, சிகிச்சை அளிக்க தொண்டு நிறுவனமும் தயாராகி விட்டது.இம்மாதம் இறுதியில் நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை துவங்கிவிடும். நாய்களை பிடித்து சிகிச்சை அளித்து, பிடித்த இடத்திலேயே தான் விட முடியும்.அதுதான் சட்டமும் சொல்கிறது. நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடுவது பற்றி நகர மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி