உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் தடையின்றி செல்ல புதிதாக சிறு பாலம் அமைப்பு

மழைநீர் தடையின்றி செல்ல புதிதாக சிறு பாலம் அமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சேக்குபேட்டை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் பி.எஸ்.கே., தெருவில் உள்ள மாநகராட்சி நீரேற்றும் நிலையம் ஒட்டி செல்கிறது. இக்கால்வாய் பி.எஸ்.கே., தெருவில் குறுக்கிடும் இடத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறுபாலம் உள்ளது.சாலையின் தரை மட்டத்தைவிட நான்கு அடி பள்ளத்தில் சிறுபாலம் இருந்ததாலும், கால்வாய் முழுதும் மண்திட்டுகளால் அடைப்பு ஏற்பட்டு இருந்ததாலும், ரயில்வே சாலை உள்ளிட்ட அப்பகுதியில் பெய்யும் மழைநீர் சிறுபாலம் வழியாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு சாலையில் மழைநீர் தேங்கி வந்தது.இதையடுத்து மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், பி.எஸ்.கே., தெருவின் குறுக்கே உள்ள பழைய சிறுபாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி பொது நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் செலவில், 1.7 மீட்டர் அகலம், 5 அடி உயரம், 10 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சிறுபாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.புதிதாக கட்டப்படும் சிறுபாலம், மழைநீர் வடிகால்வாயுடன் இணைக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் 10 நிமிடத்தில் வெளியேறும் என, காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி