உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலிபரை தாக்கிய 9 பேருக்கு கம்பி

வாலிபரை தாக்கிய 9 பேருக்கு கம்பி

ஸ்ரீபெரும்புதுார்,சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கலையரசன், 25. சுங்குவார்சத்திரத்தில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து சுங்குவார்சத்திரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எச்சூர் ஈஸ்வரன் கோவில் அருகே சென்ற போது, ஒரு கும்பல் கலையரசனை மறித்து, மது போதையில்தகராறில் ஈடுபட்டனர்.மேலும், அங்கிருந்த பீர் பாட்டில், கட்டையால் சரமாரியாக தாக்கியதில், கலையரசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்படி, சுங்குவார்சத்திரம் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்,32, சீனு, 22, உதயகுமார், 24, லட்சுமணன், 23, பிரவின்தாஸ், 23, அசோக், 28, ராஜேஷ், 25, சந்தாஷ், 28, வெற்றிவேல், 30, ஆகிய ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை