100 நாள் திட்ட பணிகளை பார்வையிட்ட அதிகாரி
காஞ்சிபுரம்:ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த பணிகளை மத்திய அரசின் இயக்குனர் சஞ்சய்குமார் தலைமையில், மத்திய ஆய்வுக் குழுவினர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்தனர்.கரசங்கல் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் நாற்றங்கால் பண்ணை, மண்புழு உரம் தயாரிப்பு, விளையாட்டு மைதானம், ஊராட்சி வரவு - செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். வளையக்கரணை, எழிச்சூர் பண்ணை குட்டை ஆகியவற்றை பார்வையிட்டனர். இதையடுத்து, தேவரியம்பாக்கம் ஊராட்சியில் குறுங்காடு, தடுப்பணை மற்றும் பழவேரி ஊராட்சியில் பண்ணை குட்டை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.