உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நேர்காணலுக்கு ஆன்லைனில் அனுமதி சீட்டு

நேர்காணலுக்கு ஆன்லைனில் அனுமதி சீட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில், காலியாக இருக்கும் 35 விற்பனையாளர், 16 கட்டுனர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, நவ.,25ம் தேதி முதல், டிச.,5ம் தேதி வரையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், எண்.5-ஏ, வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் -1 என்கிற முகவரியில் நேர்காணல் நடைபெற உள்ளது.இந்த நேர்காணலுக்கு, www.drb kpm.inஇணைய தளத்தின் வழியாக, அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், 90430 46100 மொபைல் போன் எண் மற்றும் gmail.comஎன்கிற மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ