உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை மையம் திறப்பு

உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை மையம் திறப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உயர்கல்வியில் சேர்வது குறித்த வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது.இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியர் உயர்கல்வியில் சேர்தல், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக, உயர்கல்வி தொடர்பான ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்காக, கலெக்டர் வளாகம், மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய அலுவலகத்தில், உயர் கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.நேற்று முதல், அக்டோபர் மாதம், 31ம் தேதி வரை செயல்படும். உயர்கல்வியில் சேர்வது சார்ந்த வழிகாட்டல் மற்றும் ஆலோசனை தேவைப்படுவோர் நேரிலோ அல்லது 044 -27237107 , 97888 58663 என்ற எண்ணில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !