மேலும் செய்திகள்
நெல் மூட்டைகள் தேக்கம்; நாகை விவசாயிகள் வேதனை
09-Feb-2025
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களுக்கும், ஏரி, கிணறு மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக நெல் பயிரிடுவதை விவசாயிகள் முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் செயல்படுத்தப்படும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர்.இவ்வாறு காஞ்சிபுரம் மண்டலத்தில் விவசாயிகள் கொள்முதல் செய்யும் நெல்லை வெயில் மற்றும் மழைக்காலத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்க நவீன நெல் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்தில், 15 ஆயிரம் டன் அளவிற்கு நெல் சேமிக்கும் வகையில், கூரையுடன் கூடிய 5 சேமிப்பு தளங்கள் அமைக்க 14.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்காக வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 8 ஏக்கர் நிலப்பரப்பில் பணி துவங்கி சமீபத்தில் நிறைவு பெற்றது.இந்நிலையில், தமிழ்நாடு நுகார் பொருள் வாணிப கழகம் சார்பில், பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட நவீன நெல் சேமிப்பு தளங்களை முதல்வர் ஸ்டாலின் கானொலி காட்சி வாயிலாக நேற்று திறந்த வைத்தார்.அதன் ஒரு பகுதியாக கட்டவாக்கம் நெல் சேமிப்பு தளம் நேற்று திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், து.தலைவர் சேகர் மற்றும் நுகார்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள்வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
09-Feb-2025