உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நத்தாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை திறப்பு

நத்தாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை திறப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லூர் கிராமப் பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை கட்டடம், பழுதடைந்ததையடுத்து, புதிய கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, ஊராட்சி பொது நிதியின் கீழ், 5 லட்சம் ரூபாய் செலவில் அப்பகுதி பேருந்து நிறுத்தத்தில், புதிய நிழற்குடை கட்டடத்திற்கான பணி நடைபெற்று வந்தது.பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, திறப்பு விழா நடைபெற்று பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இதேபோன்று, மதுராநல்லூர் கிராம பேருந்து நிறுத்தத்திலும், 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டிய புதிய நிழற்குடை கட்டடம் நேற்று திறப்பு விழா நடந்தது.உத்திரமேரூர் தி.மு.க. எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நிழற்குடை கட்டடத்தை திறந்து வைத்தார். வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !