மேலும் செய்திகள்
தவளக்குப்பத்தில் தேசிய கொடி பேரணி
23-May-2025
பா.ஜ., வினர் தேசியக்கொடி பேரணி
25-May-2025
காஞ்சிபுரம்:ஆபரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் கட்சி பாகுபாடின்றி, மூவர்ண தேசிய கொடி ஏந்திய 'திரங்கா யாத்திரை' பேரணி காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியியல் துவங்கிய பேரணி, பல்வேறு முக்கிய வீதி வழியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.இதில், பங்கேற்றவர்கள் தேசிய கொடியை ஏந்தியும், 65 அடி நீளமும், மூன்றடி அகலமும் கொண்ட தேசிய கொடியை தாங்கியவாறு, இந்தியாவின் பெயரை நிலை நாட்டிய ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், பாரத் மாதா கி ஜே மற்றும் ஜெய்ஹிந்த் உள்ளிட்ட முழக்கங்களுடன், பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.இந்நிகழ்ச்சியில், பா.ஜ., கோட்ட பொறுப்பாளர் வினோபாஜி செல்வம், பா.ஜ., காஞ்சிபுரம் மாவட்ட ஜெகதீசன், பா.ம.க., மாவட்ட செயலர் மகேஷ் குமார், முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடினர்.
23-May-2025
25-May-2025