உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் 5 சன்னிதிகளுக்கு நாளை பாலாலயம்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் 5 சன்னிதிகளுக்கு நாளை பாலாலயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஐந்து உப சன்னிதிகளுக்கு நாளை பாலாலயம் நடக்கிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, முதற்கட்டமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரம், கோவில் வளாகத்தில் உள்ள உடையவர் சன்னிதி, பெரியாழ்வார் சன்னிதியில் திருப்பணியை துவக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி, கோவிலில் பாலாலயம் நடந்தது. உடையவர் சன்னிதி, திருப்பணி சமீபத்தில் நிறைவு பெற்று கடந்த ஏப்., 20ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள உப சன்னிதிகளான வேணுகோபாலன், வராகர், ரங்கநாதனர், திருவனந்தாழ்வார், கருமாணிக்க வரதர் என, சன்னிதிகளின் திருப்பணி துவங்க உள்ளது. இதையொட்டி இந்த ஐந்து சன்னிதிகளுக்கும் நாளை காலை பாலாலயம் நடைபெறுகிறது. இதில் நாளை, காலை 6:00 மணிக்கு திருமஞ்சனம் கொண்டு வரப்பட்டு, பெருமாள் திருவாராதனம், காலை 8:30 மணிக்கு கலாகர்ஷணமும், தொடர்ந்து யாகசாலை, பூர்ணாஹூதியும், காலை 10:00 மணக்கு துலா லக்னத்தில் ப்ரோக்ஷ்ணமும், 11:00 மணிக்கு சாற்றுமறை, தீர்த்தம் கோஷ்டி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !