உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பன்னீர் ரோஜா கிலோ ரூ.20 முல்லை ரூ.100க்கு விற்பனை

பன்னீர் ரோஜா கிலோ ரூ.20 முல்லை ரூ.100க்கு விற்பனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பூக்கடை சத்திரத்திற்கு பெங்களூரூ, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பூக்களும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள வதியூர், கூரம், சிறுவாக்கம், புரிசை, மூலப்பட்டு, மணியாச்சி, உள்ளிட்ட வட்டாரங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இந்நிலையில், நேற்று பூக்களின் விலை வீழ்ச்சியடைந்து இருந்தது. அதன்படி கடந்த கடைசி முகூர்த்த நாளில், கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை 100 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மூக்குத்தி ரோஜா 150 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி 350 ரூபாய்க்கும், 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ 250 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட பன்னீர்ரோஜா 20 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கி நேற்று 30 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.இதுகுறித்து காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தைச் சேர்ந்த பூ மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரி அகரம் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை நேற்று முன்தினம் முடிந்த நிலையில், முகூர்த்தம் நாட்கள் இல்லாததால், பெரும்பாலான பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக முல்லைப் பூ கிலோ 100 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 20 ரூபாய்க்கும் விற்கப்படுவதால், இப்பூக்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, தோட்டத்தில் பூக்களை பறிக்கும் ஆட்களுக்குகூட கூலி வழங்க இயலாத சூழல் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை