முனீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா
உத்திரமேரூர்; உத்திரமேரூர் பேரூராட்சி, வந்தவாசி சாலையில் முனீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால்சிறப்பு அபிஷேகம்செய்யப்பட்டது.பின், பிற்பகல் 12:30 மணிக்கு முனீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மதியம் 2:30 மணிக்கு வீதியுலா நடந்தது.இந்த பங்குனி மாத திருவிழாவில், மலேசிய நாட்டு பக்தர்கள், 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்று,சுவாமி தரிசனம் செய்தனர்.