மேலும் செய்திகள்
செய்தி எதிரொலி :சேதமடைந்த மின் கம்பம் மாற்றம்
21-Nov-2024
உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில், மின்வாரியத்தால் விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு, கம்பிகள் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.மூன்று நாட்களுக்கு முன், 'பெஞ்சல்' புயலின் போது, மின்கம்பிகள் அறுந்து விவசாய நிலத்தில் விழுந்தன. உத்திரமேரூர் மின்வாரிய துறையினர் துரிதமாக செயல்பட்டு, மின் இணைப்பைதுண்டித்தனர்.அறுந்து கிடக்கும் மின்கம்பியை மாற்றி, துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை தற்போது வரை வழங்கவில்லை. இதனால், நெற்பயிர் நடவு செய்துள்ள நிலங்களுக்கு, மின் மோட்டாரை இயக்கி, தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அறுந்து கிடக்கும் மின் கம்பியை அகற்றிவிட்டு, புதிதாக கம்பிகள்பொருத்தி, உடனே மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
21-Nov-2024