ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்வதில் பரந்துார் கூட்டுறவு துறையினர் அலட்சியம்
மேல்பொடவூர்:ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்வதில், பரந்துார் கூட்டுறவு துறையினர் அலட்சியம் காட்டுவதாக, மேல்பொடவூர் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, மேல்பொடவூர் கிராமத்தில், ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு, 135க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கூட்டுறவுத் துறையினர் வினியோகம் செய்து வருகின்றனர்.செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு தினங்களில், கூட்டுறவு துறையினர் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்துவிட்டு செல்கின்றனர்.ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை, கூட்டுறவுத்துறையினர் நேற்று முன்தினம் வரையில் வினியோகம் செய்யவில்லை என, கிராம மக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, பரந்துார் கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தில் புகார் அளித்தும் ஊழியர்கள் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யவில்லை என, புலம்பல் எழுந்துள்ளது.எனவே, மேல்பொடவூர் கிராமத்தில் தாமதமின்றி ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.