உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முசரவாக்கம் கிராமத்தில் நாளை மயிலார் திருவிழா

முசரவாக்கம் கிராமத்தில் நாளை மயிலார் திருவிழா

முசரவாக்கம்:காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தில் அடைஞ்சியம்மன், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மயிலார் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா நாளை மாலை 4:00 மணிக்கு துவங்குகிறது. இதில், கோட்டை மாரியம்மனும், அடைஞ்சியம்மனும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலாவாக மந்தைவெளி வருகின்றனர்.அப்போது, பக்தர்கள் தேர் இழுத்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். கோலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், வேணுகோபால பஜனை குழுவினரின் பஜனையும் நடைபெறுகிறது.இரவு 7:00 மணிக்கு வானவேடிக்கையும், 8:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு ஆரணி வள்ளி நாடக குழுவினரின் நாடகம் நடைபெறுகிறது. இதில், 22ம் தேதி காலை 9:30 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி