/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்து கிடக்கும் கால்வாய் நடைபாதை பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
திறந்து கிடக்கும் கால்வாய் நடைபாதை பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஹோட்டல் தமிழ்நாடு அருகில், இரு இடங்களில், கால்வாய் மீது கான்கிரீட் சிலாப் வாயிலாக மூடப்படாமல் உள்ளது.இதனால், நடைபாதையில் செல்லும் பாதசாரிகள், திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாயின் மீது, கான்கிரீட் சிலாப்பை மூடி, நடைபாதையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.