உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்

நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்

ஓரிக்கை:காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையோர நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள ஓரிக்கை மிலிட்டரி சாலை 7 கி.மீ., நீளமும், 5.5 மீட்டர் அகலமும் கொண்டது. கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - கன்னியாகுமரி சாலை திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிலிட்டரி சாலையோரம் உள்ள வீட்டினர் நடைபாதையை ஆக்கிரமித்து, பூந்தொட்டியில் செடிகள் வைத்துள்ளனர். மேலும், கடைக்காரர்களும் தங்களது கடைகளை, நடைபாதையை ஆக்கிரமித்து விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், கனரக வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, மிலிட்டரி சாலையோரம் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை