உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல் அரவை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புழுதியால் மக்கள் அவதி

கல் அரவை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புழுதியால் மக்கள் அவதி

திருமுக்கூடல்:அருங்குன்றம் சாலை ஓரத்தில் இயங்கும் கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் புழுதியை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரத்தில் இருந்து, திருமுக்கூடல் மற்றும் அருங்குன்றம் வழியாக, சாலவாக்கம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது.இச்சாலையில், மதுார் கூட்டுச்சாலை அடுத்த, அருங்குன்றத்தில் அடுத்தடுத்து இரண்டு கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.இந்த தொழிற்சாலைகளில் புகை மற்றும் புழுதிகள் பறக்காமல் தடுக்க கல் அரவை இயந்திரத்தில் தண்ணீர் தெளித்து இயக்க வேண்டும் என்பது விதிமுறை.ஆனால், இயந்திரங்களில் அதிகளவு தண்ணீர் தெளித்து இயக்கினால் இயந்திரம் விரைவாக பழுதடையும் என்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது.இதனால், இப்பகுதி கல் அரவை இயந்திரங்களில் தண்ணீர் தெளிக்காமலே இயக்குவதாக கூறப்படுகிறது.தண்ணீர் தெளிக்காததால் அதிக அளவு புகை மற்றும் புழுதிகள் வெளியேறி சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவுகின்றன.இப்புகையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் நிலங்களில் சாகுபடி பணி மேற்கொள்ளும் விவசாயிகள், மேய்ச்சல் நிலங்களில் கால்நடை பராமரிப்போர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால், சுற்றுச்சூழல் மாசு மற்றும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். எனவே, சாலையோர கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் புழுதிகள் பரவாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருமுக்கூடல் மற்றும் அருங்குன்றம் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை