வர்ணம் பூசாத வேகத்தடை ஏனாத்துார் மக்கள் அவதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் இருந்து, நல்லுார் வழியாக வையாவூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, ஏனாத்துார், சமத்துவபுரம், கட்டவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், வையாவூர், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில், குடியிருப்பு, பள்ளி, மூன்று சாலை கூடுமிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் அடிக்கப்படாமல் உள்ளது. ஒளி பிரதிபலிப்பான் பொருத்தவில்லை.இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, ஏனாத்துார் - வையாவூர் சாலையில் இருக்கும் வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூசி, ஒளி பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.