உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்னழுத்த பிரச்னை தீர்வு காண நத்தாநல்லுார் மக்கள் கோரிக்கை

மின்னழுத்த பிரச்னை தீர்வு காண நத்தாநல்லுார் மக்கள் கோரிக்கை

வாலாஜாபாத்: நத்தாநல்லுார் கிராமத்தில் நிலவும் குறைந்த மின் அழுத்தம் பிரச்னைக்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தாநல்லுார் கிராமத்திற்கு, வாலாஜாபாத் மின் பகிர்வு மையம் வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. நத்தாநல்லுாரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்குடியிருப்பு பகுதியில், சில வீடுகளுக்கான மின் இணைப்பில் குறைந்த மின் அழுத்தம் பிரச்னை நிலவுகிறது. இதனால், மின்சாதன பொருட்கள் பழுது ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, நத்தாநல்லுாரில் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை