உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மேல்பாக்கத்தில் சமுதாய கூடம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

மேல்பாக்கத்தில் சமுதாய கூடம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்:மேல்பாக்கத்தில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், மேல்பாக்கம் ஊராட்சியில், புதுார், மேல்பாக்கம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேல்பாக்கத்தில் சமுதாய கூடம் இல்லாததால், அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் போதிய வசதி இல்லாததால், மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தாமல் கோவில்களில் நடத்தி வருகின்றனர். எனவே, மேல்பாக்கத்தில் சமுதாய கூடம் அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை