உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாக்கடை அடைப்பை நீக்கக்கோரி மனு

சாக்கடை அடைப்பை நீக்கக்கோரி மனு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருப்புக்கூடல் தெருவில், சாலை அமைக்கும்போது மூடப்பட்ட பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைப்பை நீக்க கோரி, தெருவாசிகள் காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.மனு விபரம்:காஞ்சிபுரம், திருப்புக்கூடல் தெருவில், அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, வீட்டில் கழிவுநீர் வெளியேறாமல் திரும்பி வீட்டிற்குள்ளேயே வருகின்றன. இதுதொடர்பாக பலமுறை மாநகராட்சிக்கு பணம் செலுத்தினோம். இதையடுத்து மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் சாலையை உடைத்து பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை கழிவுநீர் லாரி வாயிலாக அகற்றினர்.இருப்பினும், எங்கள் பகுதியில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது. திருப்புக்கூடல் தெரு கடைசியில், சாலை அமைக்கும்போது மூடப்பட்ட மேன்ஹோல் அடைப்பை நீக்கினால்தான், இப்பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என, துாய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, திருப்புக்கூடல் தெருவில், சாலை அமைக்கும்போது மூடப்பட்ட மேன்ஹோலை கண்டறிந்து, அடிக்கடி ஏற்படும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி