உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அறிவிப்பின்றி வீடு இடித்த அதிகாரிகளை விசாரிக்க கோரி கலெக்டரிடம் மனு

 அறிவிப்பின்றி வீடு இடித்த அதிகாரிகளை விசாரிக்க கோரி கலெக்டரிடம் மனு

உத்திரமேரூர்: கடல்மங்கலத்தில், புறம்போக்கு நிலத்தில் கட்டி இருந்த வீட்டை முன் அறிவிப்பு இல்லாமல் இடித்து அப்புறப்படுத்திய அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில், உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் என்பவர் கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடல்மங்கலம், மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில், 50 ஆண்டுகளாக குடிசை வீடு கட்டி வசித்து வருகிறேன். இதனிடயே, சில மாதங்களாக, 'ஹாலோ பிளாக்' கற்கள் கொண்டு கட்டட வீடு அமைத்து, கடந்த 24ம் தேதி, அந்த வீட்டிற்க்கு வாசற்கால் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடல்மங்கலம் ஊராட்சி தலைவர், நான் தேர்தலில் அவருக்கு ஓட்டளிக்காத விரோதத்தால் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை கொண்டு முன் அறிவிப்பு ஏதும் இல்லமால் பொக்லைன் இயந்திரம் வாயிலாக என் வீட்டை இடித்து அப்புறப்படுத்தி விட்டார். இதனால், கணவரை இழந்த நானும், திருமணமாகாத என் மகளும் வீடின்றி தற்போது தவிக்கிறோம். கடல்மங்கலம் மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில் ஏற்கனவே இப்பகுதியைச் சேர்ந்த 15 குடும்பத்தினர் கட்டட வீடு கட்டி வசிக்கின்றனர். அவை குறித்தெல்லாம் நடவடிக்கை இல்லாத நிலையில் என் வீடு மட்டும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. எனவே, 50 ஆண்டு களாக வீடு கட்டி வசித்து வரும் இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கியும், முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் ஒரு தலை பட்சமாக வீட்டை இடித்த அதிகாரிகளை அழைத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை