உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பூசிவாக்கம் மண்டலேஸ்வரர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தல்

பூசிவாக்கம் மண்டலேஸ்வரர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாவாசாகி பேட்டையில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மண்டலேஸ்வரர் கோவில், இலுப்பை மரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் உள்ள மூலவர் மழைகாலத்தில் கருமை நிறத்திலும், கோடை காலத்தில் பொன்னிற திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பழமையான இக்கோவிலை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முறையாக பராமரிக்காததால், கோவில் கோபுரம் மற்றும் சுவர்களில் செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ளது.இக்கோவிலை பழமை மாறாமல், புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்..இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கதிரவன் கூறியதாவது:பூசிவாக்கம், பாவாசாகிபேட்டை மண்டலேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக 67 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு விரைவில் திருப்பணி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை