கணபதிபுரம் சாலையோரம் 10,000 பனை விதைகள் நடவு
வாலாஜாபாத்:கணபதிபுரம் - இளையனார்வேலுார் சாலையோரங்களில் 10,000 பனை விதைகள் நடப்பட்டன. வாலாஜாபாத் அடுத்த, கணபதிபுரம் கிராமத்தில் இருந்து, காப்புக்காட்டு வழியாக இளையனார்வேலுார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் இருபுறங்களிலும், பனை விதைகள் நடவு செய்து பசுமை ஏற்படுத்த, காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் பனை விதைகள் நடவு செய்ய பட்டன. கணபதிபுரம் கிராமத்தில் துவங்கி, அடுத்த 2 கி.மீ., வரை 10,000 பனை விதைகள் சாலையோர இருபுறமும் நடவு செய்யப்பட்டன.