உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காசி விஸ்வநாதர் கோவில் கோபுரத்தில் வளரும் செடிகள்

காசி விஸ்வநாதர் கோவில் கோபுரத்தில் வளரும் செடிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கருக்குப்பேட்டை கிராமத்தில், ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.இக்கோவிலில், தெற்கு கோபுரம் வழி, பக்தர்களின் வழிபாடு பயன்பாட்டிற்கும் மற்றும் கிழக்கு கோபுரம் பூட்டியும் வைக்கப்பட்டு உள்ளன.இந்த கோபுரங்களை முறையாக பராமரிக்காததால், கோபுரத்தின் மீது அரசமரக்கன்றுகள் முளைத்து உள்ளன.இதனால், கோபுரத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், புறாக்களின் எச்சத்தால், கோபுரம் பொலிவிழந்து காணப்படுகிறது.எனவே, கோவில் கோபுரம் சேதம் ஏற்படுவதற்கு முன், செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !