உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விச்சந்தாங்கல் தோட்டக்கலை பண்ணையில் விற்பனைக்கு தயார் நிலையில் செடிகள்

விச்சந்தாங்கல் தோட்டக்கலை பண்ணையில் விற்பனைக்கு தயார் நிலையில் செடிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, விச்சந்தாங்கலில், அரசு தோட்டக்கலை பண்ணை இயங்கி வருகிறது. இங்கு பழச்செடிகள், அழகிய மலர் செடிகள், சாலையோர மரச்செடிகள், மூலிகை செடிகள், வாசனை திரவிய செடிகள் என, பல்வேறு வகையான செடிகள் குறைந்த விலையில் விற்பனைக்கு தயாராக உள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால், பூமியில் உள்ள ஈரப்பதம் காரணமாக மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு ஏதுவான தருணமாக உள்ளது.எனவே, இங்குள்ள பல்வேறு வகையான செடிகளை பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கிச் சென்று பயனடைலாம் என, விச்சந்தாங்கல் தோட்டக்கலை அலுவலர் சவுமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் தனஞ்செயன் ஆகியோர் தெரிவித்தனர்.

செடிகளின் விலை

செடி வகை ரூபாய்.தென்னங்கன்று 65கொய்யா - சிவப்பு 45கொய்யா - வெள்ளை 40அரளி பதியன் 40நெல்லி 15சீதா 15அத்தி 15பப்பாளி 15புளி 15நாவல் 15தேக்கு 15புங்கன் 15வேம்பு 15குல்முகார் 15பெல்டோபாரம் 15கொடுக்காப்பளி 15துளசி 15திப்பிலி 15பிரண்டை 15வல்லாரை 15ஆடுதொடா 15அலங்கார செடிகள் 15மல்லி 15கனகாம்பரம் 15ஜாதிமல்லி 15காவட்டான் 15ரோஜா 15முல்லை 15மிளகாய் குழிதட்டு நாற்று 1.20கத்திரி குழிதட்டு நாற்று 1.20


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை