உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழங்குடியினரை தாக்கிய வாலிபர்கள் மீது போலீசீல் புகார்

பழங்குடியினரை தாக்கிய வாலிபர்கள் மீது போலீசீல் புகார்

உத்திரமேரூர்: குண்ணவாக்கத்தில் பழங்குடியினரை தாக்கிய, வடமாநில வாலிபர்கள் மீது உத்திரமேரூர் போலீசில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, குண்ணவாக்கம் கிராமத்தின் பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன், 38. இவருக்கு, ஒரு வாரத்திற்கு முன் புதிதாக கட்டப்பட்டு வரும், அரசு தொகுப்பு வீட்டை பயன்படுத்தி கொள்ள ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. இதையடுத்து, சரவணன் தன் குடும்பத்தினருடன் ஒரு வாரமாக தங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு,மாலை 5:00 மணிக்கு, குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத ஆறு வடமாநில வாலிபர்கள், வீட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதைக்கண்ட, சரவணன் அவர்களை நோக்கி இது எங்களுடைய வீடு நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு, வடமாநில வாலிபர்கள் பழங்குடியினரான சரவணன் மற்றும் அவரின் மகன் கமலேஷையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து, சரவணன் உத்திரமேரூர் போலீசில் நேற்று அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !