உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீலாங்கரையில் மகன்தாக்கியதில் போலீஸ் அதிகாரி கவலைக்கிடம்

நீலாங்கரையில் மகன்தாக்கியதில் போலீஸ் அதிகாரி கவலைக்கிடம்

நீலாங்கரை,இ.சி.ஆர்., பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர், 48; சென்னை விமான நிலையத்தில் எஸ்.பி.சி.ஐ.டி., - எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார்.இவர், குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, கடந்த 25ம் தேதி இரவு, வீட்டில், மனைவி, பிள்ளைகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது ஆத்திரமடைந்த மகன் சுகாஸ், 21, விஜயபாஸ்கர் முகத்தை, கையால் சரமாரியாக தாக்கினார். அவரை சுவரில் இடித்தும் பலமாக தாக்குதல் நடத்தினார். இதில், விஜயபாஸ்கரின் தாடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சுய நினைவின்றி, காதிலிருந்து ரத்தம் வருவதால் அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்து வருவதாக, மருத்துவர்கள் கூறி உள்ளனர்.நீலாங்கரை போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, மகன் சுகாஸை கைது செய்தனர். சுகாஸ், சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பொறியியல் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை