உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பறிமுதல் வாகனங்கள் நிறுத்த இடமில்லாத காவல் நிலையம்

பறிமுதல் வாகனங்கள் நிறுத்த இடமில்லாத காவல் நிலையம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சின்னநாரசம்பேட்டை தெருவில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மணல் கடத்தல், கஞ்சா கடத்தல், விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலையம் எதிரே உள்ள, தெருவின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்த, காவல் நிலையம் எதிரே போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று, சக்கரம் கோதண்டராம அய்யர் தெருவில் ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், வேன், கார், லாரி ஆகியவை இத்தெருவின் வழியே செல்ல முடியாமல் திரும்பி செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, உத்திரமேரூரில் தெருவின் நடுவில் நிறுத்தப்பட்டுள்ள, லாரியை அகற்ற, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை