அரசியல் கட்சி கொடி கம்பங்கள் தேவரியம்பாக்கத்தில் அகற்றம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.பேருந்து நிறுத்தம், பள்ளிகள் வளாகம், கிராமங்களின் நுழைவாயில் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறை உள்ளாட்சி தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.தேவரியம்பாக்கம் ஊராட்சி நுழைவாயிலில் நடப்பட்டிருந்த பல்வேறு அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்களை, நேற்று காலை, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அகற்றினர்.