உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் இன்று (நவ.,18) காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காஞ்சிபுரம் ஓய்வூதிய சங்க மாவட்ட செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். அஞ்சல் துறையில் குறைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும்; தமிழகத்திற்கு 1,300 கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும்; தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு பறிக்க வேண்டாம் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. அஞ்சல் எழுத்தர் பிரிவு கோட்ட செயலர் கேசவன், தபால்காரர்கள் சங்க செயலர் பிரபாகரன், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க செயலர் கோபால் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !