உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முதல்வர் கபடி போட்டி திருமலை கல்லுாரி சாம்பியன்

முதல்வர் கபடி போட்டி திருமலை கல்லுாரி சாம்பியன்

காஞ்சிபுரம், : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை, காஞ்சிபுரம் மாவட்ட அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான கபடி போட்டி, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், 35 கல்லுாரியைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.இறுதி போட்டியில், கீழம்பி திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி வெற்றி பெற்று முதல்வர் கோப்பைக்கான கபடி சாம்பியன்ஷிப் - 2024' பட்டத்தையும், 54,000 ரூபாய் ரொக்கப் பரிசையும் வென்றனர்.வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கல்லுாரி முதல்வர் டி.மோகன்ராஜ், உடற்கல்வி இயக்குனர் சி.செல்வராஜ் உட்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !