மாநில சதுரங்க போட்டி வென்றோருக்கு பரிசளிப்பு
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் பல்லவா சதுரங்க சபா சார்பில், பள்ளி மாணவ - -மாணவியருக்கான மாநில அளவிலான சதுரங்க போட்டி, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் செயின்ட் ஆண்டனி பள்ளியில், கடந்த 9ம் தேதி நடந்தது.இதில், 7 வயதிற்கு உட்பட்டோர் முதல், 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ - -மாணவியருக்கு ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், தமிழகம் முழுதும், 18 மாவட்டங்களில் இருந்து 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் இந்துமதி தமிழ்செல்வன் போட்டியை துவக்கி வைத்தார்.இதில், ஆண்கள் பிரிவில் 20; பெண்கள் பிரிவில் 20 என, முதல் இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 1 கிராம் வெள்ளி நாணயம், சான்றிதழை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வழங்கினார்.