உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாவட்ட சதுரங்க போட்டி வென்றோருக்கு பரிசளிப்பு

மாவட்ட சதுரங்க போட்டி வென்றோருக்கு பரிசளிப்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில், மாவட்ட அளவிலான, பள்ளி மாணவ - மாணவியர், பொது பிரிவினர் மற்றும் பெண்களுக்கான தனி பிரிவுகளில் சதுரங்க போட்டி, காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், 7, 9, 11, 15 வயதிற்கு உட்பட்ட மாணவ - -மாணவியருக்கு நான்கு பிரிவுகளாகவும், பொது பிரிவினர் மற்றும் பெண்களுக்கு என, நடத்தப்பட்ட இப்போட்டியில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியை சதுரங்க கழக தலைவர் அப்துல் ஹமீது துவக்கி வைத்தார்.இதில், ஆண்கள் பிரிவில் 15 பேர், பெண்கள் பிரிவில் 10 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழை, காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலர் ஜோதிபிரகாசம் வழங்கினார். இதில், முதல் இரண்டு இடங்களை பிடித்த 10 மாணவ- - மாணவியர் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ