மேலும் செய்திகள்
மாநில வில்வித்தை போட்டி; கடலுார் மாணவர்கள் சாதனை
12-Dec-2024
காஞ்சிபுரம்:ஆந்திர மாநிலம், கர்னுாலில், எட்டாவது தேசிய ரிங் பைட் சாம்பியன்ஷிப் போட்டி, டிச., 27 முதல் 29 வரை நடந்தது. ஆறு பிரிவுகளாக நடந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இஷின்றியூ கராத்தே பயிற்சி பள்ளியை சேர்ந்த எட்டு மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், ஜெய்விக், வெற்றி, வர்ஷா ஆகியோர் தங்க பதக்கங்களையும், ரோஹித், கவியரசன் இருவர் வெண்கல பதக்கமும் வென்றனர்.மேலும், ஒட்டுமொத்த குழு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று, காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்தனர். கோப்பையை வென்ற வீரர்களுக்கான பாராட்டு விழா, தலைமை பயிற்சியாளர் சென்சாய் நுார்முஹம்மது தலைமையில், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்து.இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனையரை பாராட்டினார்.
12-Dec-2024