உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவ - மாணவியருக்கு கல்வி உதவி வழங்கல்

மாணவ - மாணவியருக்கு கல்வி உதவி வழங்கல்

களக்காட்டூர்:காஞ்சி சேவை குழு மற்றும் 'பீல்' அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூர் பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள, மாணவ, மாணவியர் 35 பேருக்கு, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன், மாணவ, மாணவியருக்கு, புத்தகம், எழுது பொருட்கள், ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை வழங்கினார்.பள்ளி செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்தும், முறையான தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்தும், அரசு நலத்திட்டங்களை பெற தேவையான விதிமுறை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார், 'யமஹா' மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையின் உதவி பொது மேலாளர் சதீஷ்குமார் மற்றும் களக்காட்டூர் இருளர் சமுதாய குடியிருப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை