உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவ --- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மாணவ --- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

உத்திரமேரூர், திருப்புலிவனத்தில் பழங்குடியின மாணவ -- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன. உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தில், 'உயிர் பவுன்டேசன்' சார்பில், பழங்குடியின மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. உயிர் பவுன்டேசன் தலைவர் செலின் ரூபினின் தலைமை தாங்கினார். பேக்ஸ் டெக்னாலஜி நிறுவன இயக்குனர் குஹன் பங்கேற்று, 545 பழங்குடியின மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். அதில் மணல்மேடு, மலையாங்குளம், புத்தளி, புலிவாய், வெங்கச்சேரி, திருப்புலிவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, நோட்டு, புத்தகம், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. உயிர் பவுன்டேசன் துணைத் தலைவர் கிறிஸ்டினா ஜஸ்டின் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ