மேலும் செய்திகள்
சுகாதார பணியாளர்களுக்கு துாய்மை பணி உபகரணங்கள்
19-Sep-2025
உத்திரமேரூர், -நெய்யாடுபாக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. உத்திரமேரூர் தாலுகா, நெய்யாடுபாக்கம் கிராமத்தில் 'சுந்தரவடிவேலனார் சமத்துவ சமுதாய அறக்கட்டளை' சார்பில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுந்தரவடிவேல் 113-வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், அறக்கட்டளை தலைவர் லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Sep-2025