மேலும் செய்திகள்
2 துணை பி.டி.ஓ., மாற்றம்
05-Jul-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 40 ஊராட்சிகளில் உள்ள துாய்மை காவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, 18.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான, சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. துாய்மை பாரத இயக்கம் ஊரகம், காஞ்சிபுரம் மாவட்ட ஊரா்டசி ஒன்றியம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 40 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் 171 துாய்மை காவலர்கள், 36 துாய்மை பணியாளர்களுக்கு, 18 லட்சத்து 73,500 ரூபாய் மதிப்புள்ள சீருடை மற்றும் கையுறை, முககவசம், பாதுகாப்பு காலணி,வெளிச்சத்தில் ஒளிரும் ஜாக்கெட், ரெயின்கோட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் விழா காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி. செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் ஆகியோர் சீருடை மற்றும் உபகரணங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் மலர்கொடி தலைமை வகித்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மாவதி, லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Jul-2025