உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மக்கள் குறைதீர் கூட்டம் 444 மனு க் கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 444 மனு க் கள் ஏற்பு

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், பட்டா, ஆக்கிரமிப்பு, உதவித்தொகை, வேலைவாய்ப்பு என, பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 444 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 12 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 9.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன செயற்கை கால்களும், மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்றுகள் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ஆறு பழங்குடியினருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், 2023 - -24ம் கல்வியாண்டு காமாராஜர் விருது பெற்ற பத்தாம் வகுப்பு பயிலும் 15 மாணவ - மாணவியருக்கு, 10,000 ரூபாய் ரொக்க பரிசு. பிளஸ் 2 பயிலும் 15 மாணவர்களுக்கு 20,000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், திருநங்கை ஒருவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ