உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / களியாம்பூண்டி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை

களியாம்பூண்டி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை

உத்திரமேரூர்: களியாம்பூண்டி அரசு பள்ளியில் 1.60 லட்சம் ரூபாய் செலவில் அமைக் கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை நேற்று பயன்பாட்டிற்கு வந்தது. உத்திரமேரூர் தாலுகா, களியாம்பூண்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 500 மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, நீண்ட நாட்களாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், 1.60 லட்சம் ரூபாய் செலவில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்க முன் வந்தார். அதன்படி, புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சண்முகம் தலைமை தாங்கினார். நன்கொடையாளர் சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகர் முன்னிலை வகித்தனர். களியாம்பூண்டி ஊராட்சி தலைவர் வளர்மதி பங்கேற்று, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவையை பயன் பாட்டுக்கு கொண்டு வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை