உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு வினா - விடை பயிற்சி கையேடு

மாணவர்களுக்கு வினா - விடை பயிற்சி கையேடு

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அரசு சுப்புராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கு எளிமையாக்கப்பட்ட வினா - விடை பயிற்சி கையேடு வழங்கும் விழா நடந்தது.காஞ்சிபுரம் பல்லவன் நகர அரிமா சங்க. பத்மநாபன் தலைமை வகித்தார். இதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கான முக்கிய வினா-விடை அடங்கிய பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.பள்ளி முன்னாள் மாணவர் அன்பு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர், காஞ்சி பல்லவன் நகர அரிமா நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை