விருட்ச விநாயகர் கோவிலில் ராகு-கேது பெய்ச்சி விழா
கூழமந்தல்:திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ராகு பகவான் நாளை மாலை 6:00 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கும் பிரவேசிக்கின்றனர். இதையொட்டி, காஞ்சிபுரம் வந்தவாசி சாலை, கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழாவை நடக்கிறது.இதில், நாளை மதியம் 2:00 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணியர் மற்றும் 27 நட்சத்திர அதி தேவதைகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், 27 நட்சத்திர பரிகார ஹோமமும். மாலை 6:00 மணிக்கு ராகு, கேது பெயர்ச்சி கலசாபிேஷகம், மஹாதீப ஆராதனை நடக்கிறது.