உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாய் அமைக்காததால் சாலையில் தேங்கும் மழைநீர்

வடிகால்வாய் அமைக்காததால் சாலையில் தேங்கும் மழைநீர்

மேல்ஒட்டிவாக்கம்: மேல்ஒட்டிவாக்கம் தோட்டக்கலை பண்ணை அருகில் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஊராட்சி, மேட்டுகுப்பத்தில் இருந்து முசரவாக்கம், கிளார், கீழம்பி, பாலுசெட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் மேல்ஒட்டிவாக்கம், கூத்திரமேடு சாலை வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மேல்ஒட்டிவாக்கம் தோட்டக்கலை பண்ணை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேற அப்பகுதியில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சாலையில் மழைநீர் குளம்போல தேங்குகிறது. இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடையும் சூழல் உள்ளதோடு, அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் மழைநீர் சூழும் நிலை உள்ளது. எனவே, மேல்ஒட்டிவாக்கம் தோட்டக்கலை பண்ணையில் இருந்து மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ